சென்னையில் உள்ள அரசு பொதுமருத்துவமனையை சுத்தம் செய்யும் பணி தனியாரிடம் விடப்பட்டது.
மாதந்தோறும் ஏழு லட்ச ரூபாயை பெற்றுக்கொண்டது அந்த நிறுவனம்.
அந்த தனியார் நிறுவனத்தின் செயல்பாடுகள் திருப்திகரமாக இல்லை என்று தமிழ்நாடு மருத்துவ சேவை கழகத்தின் இயக்குநரே அதிருப்தி தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் நமது மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சொல்லியிருப்பது என்ன தெரியுமா?
“சென்னை மருத்துவமனையைப்போல், சென்னையின் மற்ற மருத்துவமனைகளைப்பராமரிக்கும் பணியையும் தனியாருக்கு கொடுக்க இருக்கிறோம். முறையாக செயல்படாவிட்டால் அவர்களுடைய ஒப்பந்தத்தை ரத்து செய்வோம்”
‘முறையாக செயல்படுவது’ என்பதன் பொருள் என்ன என்பதுதான் நமக்குள்ள ஐயம்.
அரசு செய்யவேண்டிய பணிகளை தனியாரிடம் தாரை வார்த்துக்கொடுத்துவிட்டு அரசு வேறு எந்த பணிகளை செய்யப்போகிறதாம்?
ஏற்கனவே, மக்கள் இலவசமாக அனுபவித்து வந்த கல்வித்துறையை தனியாரிடம் தாரைவார்த்துக்கொடுத்துவிட்டு அவர்களிடம் கெஞ்சிக்கொண்டிருக்கிறது இந்த அரசு.
இப்போது மருத்துவத்துறையையும் தனியாரிடம் கொடுத்துவிட்டு மக்களை வாட்டி வதைக்கப்போகிறது இந்த அரசு.
ஏற்கனவே ‘கலைஞர் காப்பீட்டுத்திட்டம்’ என்னும் பெயரில் ஒரு இன்சூரன்ஸ் ஏஜண்ட் போன்று அரசு செயல்பட்டுவருகிறது.
மக்களின் வரிப்பணத்தில் அந்த தனியார் காப்பீட்டு நிறுவனம் ஓராண்டில் 200 கோடி ரூபாய் இலாபம் ஈட்டியிருக்கிறதாம்.
காப்பீட்டு அட்டையை அறுவை சிகிச்சை நிபுணர்கள் ஒரு லாட்டரி சீட்டைப்பார்ப்பதுபோன்று பார்ப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன நிலையில் அரசு என்ன செய்யப்போகிறது.
அரசு உட்கார்ந்தே இருக்கிறது. அது எப்போது நிற்கும்? எப்போது நடக்கும்?
கல்வியை ஏற்கனவே நாசப்படுத்திவிட்டார்கள். கொஞ்சநஞ்சம் வேலை செய்துகொண்டிருக்கும் அரசு மருத்துவமனையையும் நாசப்படுத்திவிடுவார்கள். திட்டத்தின் பெயரில் ஒரு சிறிய திருத்தம். ” கலைஞர் குடும்பக்காப்பீட்டுத்திட்டம்”
ReplyDeleteமா.மணி