Friday, August 20, 2010

கூத்தாட்டம்...கூத்தாட்டம்

திரையரங்குகளில் நடைபெறும் மனித உரிமை மீறல்களை ஒரு நாளேடு இன்று வெளிச்சத்திற்கு கொண்டுவந்திருக்கிறது.

திரையரங்குகளில் நடைபெறும் சுரண்டல்களையும், பகல் கொள்ளையையும் விசாரித்து ஒரு வாரத்தில் அறிக்கை அளிக்கவேண்டுமென மாநில மனித உரிமை ஆணையம் காவல்துறை ஆணையாளருக்கு உத்தரவிட்டிருக்கிறது.

சென்னையில் மட்டுமல்லாது, மாவட்டத்தலைநகரங்களில் உள்ள திரையரங்குகளிலும் இந்தக்கொள்ளை நோய் பரவிக்கொண்டிருக்கிறதாம்.

அதிநவீனத்திரையரங்குகளில் குறிப்பிட்ட இடங்கள் குறைந்த கட்டணத்தில், அதாவது பத்துரூபாய் கட்டணத்தில் அமையவேண்டும் என்பது அரசின் நிபந்தனை.

திரைக்குமுன்னால் உள்ள முதல்வரிசைக்கு கட்டணம் 10 ரூபாய்.

அதற்கான டிக்கெட்டுகளை திரையரங்கு நிர்வாகம் தாதாக்களின் உதவியோடு கூடுதல் விலைக்கு விற்றுக்கொண்டால் கேட்பதற்கு ஆளில்லை.

இந்த திரையரங்குகளில் அரசின் உத்தரவின்படி 100 ரூபாய், 120 ரூபாய் என்று இரண்டே வகையான கட்டணங்கள்தான் வசூலிக்கவேண்டும்.

ஆனால் படத்தில் நடித்த நடிகரின் தரத்திற்கேற்ப திரையரங்கு நிர்வாகம் இஷ்டம்போல் கட்டணம் நிர்ணயித்துக்கொள்கின்றனவாம்.

கட்டணக்கொள்ளை மட்டும் இல்லை.

மினரல் வாட்டர் பாட்டில் 40 ரூபாய்.

பாப்கார்ன் என்னும் சோளப்பொரி 50 ரூபாய்.

சாதாரண காபி 40 ரூபாய்.

வசதியானவர்கள் செலவழித்து சினிமா பார்க்கட்டும். வாங்கித்தின்னட்டும்.

வீட்டில் இருந்து கொண்டுபோகும் நொறுக்குத்தீனிகளுக்கு இந்த திரையரங்குகள் தடைவிதிக்க என்ன அதிகாரம் இருக்கிறது?

1000 ரூபாய் இருந்தால் ஒரு சிறுகுடும்பாம் சினிமாவிற்கு போகலாம்.

இல்லாவிட்டால் என்ன செய்யலாம்?

இருக்கவே இருக்கிறது திருட்டு டிவிடி. அதிலென்ன தவறு?

பகுத்தறிவாளர்கள் ஆட்சியில் பகுத்தறிவிற்கு ஒவ்வாத கட்டணமுறை.

அரசியல் தலைவர்களும், அவர்களது குடும்பத்தினரும் திரைப்படத்தொழிலில் ஏகபோக உரிமை செலுத்தத்தொடங்கிய பின்னர் இந்த மனித உரிமை மீறல்கள் திரையரங்குகளில் அரங்கேறத்தொடங்கியிருக்கின்றன.

தட்டிக்கேட்கும் அதிகாரம் உள்ளவர்கள் ஊமைகளாக இருக்கின்றனர்.

பொதுமக்களின் உதவிக்கு வந்துள்ள மாநில மனித உரிமை ஆணையத்திற்கு பாராட்டுகள்.

1 comment:

  1. திரை அரங்குகளில் தின் பண்டங்கள் அதிக விலைக்கு விற்பது கண்டிக்க தக்கதே.
    இந்த தீர்ப்பிற்கு நன்றிகள்.
    அதே சமயம், போன ஆட்சியிலும் இதே நிலைமை தான் இருந்தது. தேர்தல் முடிந்ததும் நிலைமை மீண்டும் மாறி விடலாம்.

    ReplyDelete